×

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண் தெய்வங்களின் சாதனைகள் தொடருவதற்கு வாழ்த்துகள்: ராமதாஸ்!

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண் தெய்வங்களின் சாதனைகள் தொடருவதற்கு வாழ்த்துகள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது X தள பதிவில் கூறியதாவது; 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண் தெய்வங்களின் சாதனைகள் தொடருவதற்கு வாழ்த்துகள். தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.37% ஆக உள்ள நிலையில், பெண் தெய்வங்களான மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.44% ஆக அதிகரித்திருக்கிறது. நினைவு தெரிந்த நாளில் இருந்து தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விஞ்சி வரும் பெண் தெய்வங்களுக்கு எனது வாழ்த்துகள். தேர்ச்சி விகிதத்தில் பெண் தெய்வங்களை வெல்ல மாணவர்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண் தெய்வங்களின் சாதனைகள் தொடருவதற்கு வாழ்த்துகள்: ராமதாஸ்! appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Chennai ,Palamaka ,Phamaka ,Ramadas! ,Dinakaran ,
× RELATED பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை;...